சென்னை

பிரபல லான்சன் டொயோட்டா கார் விற்பனை நிலைய பெண் அதிபர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள லான்சன் டொயோட்டா கார் விற்பனை நிலைய பெண் அதிபர் ரீட்டா ஜானகி ஆவார்.  இவருடைய கணவருடன் இணைந்து இவர்  இந்த கார் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.  இவர் சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் வசித்து வருகிறார்.

இன்று ரீட்டா ஜானகி தனது நுங்கம்பாக்கம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை  செய்துக் கொண்டுள்ளதாக காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது.   தற்போது 50 வயதாகும் ரீட்டா ஜானகியின் கணவர் லான்சன் டொயோட்டா விற்பனை நிலைய நிர்வாக இயக்குநராக உள்ளார்.