திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை ஹெய்டி சாடியா(Heidi Saadiya )  என்பவர், முதன்முதலாக  அங்குள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.  அதைத்தொடர்ந்து, அவர் சந்திரயான்2 பற்றிய செய்திகளை தொகுதி வழங்கினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இப்படிக்கு ரோஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு   எந்தவிதமான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்றும், கவுரவமான வேலை கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஜெ. ஆட்சியின் போல பல திருநங்கைகளுக்கு அரசு பணிகளும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் தற்போதுதான் முதன்முறையாக திருநங்கை ஒருவர் ஊடகத்துறையில் கால் பதித்துள்ளார்.  ஹெய்டி சாடியா என்ற 22வயது திருநங்கை ஆகஸ்டு 31-ம் தேதி கேரளா மாநிலத்திலுள்ள  கைராளி மலையாள செய்தி சேனலில் செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அவரது முதல் பணி, சந்திராயன்-2 பற்றிய செய்தியை வழங்கியது.

திருநங்கை ஒருவர் முதன்முதலாக செய்தி வாசிப்பாளராக பணியில் இணைந்ததற்கு, கேரள மாநில சுகாதார நலத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘கேரளாவிலிருந்து வந்த முதல் திருநங்கை தொலைக்காட்சி செய்தியாளர் சாடியா.  வாழ்த்துகள். இது இந்தியர்களுக்கு பெருமையான தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது பணி குறித்து கூறிய சாடியா,  ‘திருநங்கைகள், ஓர்பால் ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் அளிப்பது மகிழ்ச்சியாக  இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், தான், திருவனந்தபுரம் இதழியல் கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக் மீடியா முதுகலைப் படிப்பு முடித்த பிறகு, கைராளி தொலைக்காட்சியில் இன்டர்னாக ( intern) பணியாற்றினேன்.  என்னுடைய பணியைப் பார்த்து பயிற்சி செய்தியாளராக நிறுவனம் எனக்கு பணி வழங்கியது. இந்தத்துறையில் நான் எந்த பாகுபாட்டையும் உணரவில்லை. செய்தி அறையை என்னுடைய இரண்டாவது வீடு போல உணருகிறேன்.

மேலும், தான் , 18 வயதில் என்னுடைய வீட்டிலிருந்து வெளியேறினேன். என்னை, ஏற்றுக் கொள்ளாத என்னுடைய குடும்பத்தினர் மீது எனக்கு வருத்தம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.