சென்னை:
மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி வரும் தமிழக அரசு, அனைத்து வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், இதுவரை கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும், சென்னையில் 69,490 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 20க்குள் மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வீடுகள், நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.