உதகை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மக்களைப் பற்றி கவலைப்படாமல் கோமாளித்தன எமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் எடப்பாடி முதல்வராக அவர் இருக்க தகுதி அற்றவர் என்று திமுக எம்.பி. ஆ.ராஜா காட்டமாக தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், மக்கள் பாதிக்கப்பட்டனர். அங்கு 40க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகள் வழங்கினார். தொடர்ந்து அந்த தொகுதி எம்.பி. ராஜா நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார்.
இதையடுத்து மழை வெள்ளத்தால்ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அறிக்கை தயாரித்து, அதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித் ராஜா, “நீலகிரியில் மிகப்பெரிய கனமழை பெய்யும் என கடந்த 6ம் தேதி வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால், தமிழக அரசு முன்னெச் சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காததால் நீலகிரி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மக்கள் பாதிப்பு குறித்து அறிந்ததும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க சார்பில் நிவாரணப் பொருட்களும், மழையால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் வீதம் 6 லட்சம் ரூபாயும் வழங்கினார்.
ஆனால், சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி முடிவடையாத நிலையில், சேதங்களை பார்வையிட வந்த துணைமுதல்வர், 200 கோடி ரூபாய் மட்டுமே நிவாரண்ப் பணிகளுக்குத் தேவை கூறியிருப்பது கோமாளித் தனமான செயல் என கடுமையாக சாடினார். மேலும் ”நீலகிரி வெள்ள நிவாரண நிதியாக 30 கோடி ரூபாயை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது.
மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்தது, பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகவும், முதல்வராக அவர் இருக்க தகுதி அற்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது என்று தெரிவித்தவர், நீலகிரியில் ஏற்பட்ட சேதங்களையும், பாதிக்கப்பட்ட மக்களை யும் நேரடியாக பார்வையிடாமல், நீலகிரி மக்களைக் கொச்சைப்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி . நீலகிரியில் 500 கோடி அளவிற்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு 1.9 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
இவ்வாறு ஆ.ராஜா கூறினார்.