மும்பை

பிரபல இந்தி திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே இந்திய திரைப்படங்களை பற்றி டிவிட்டரில் பதிந்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்ட மத்திய அரசு அம்மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன்பிரதேசங்களாக அறிவித்தது.   அத்துடன் லடாக் பகுதியை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இதற்கு உலக நாடுகளில் பல வரவேற்பு தெரிவித்த போதிலும் பாகிஸ்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.   அதற்கு ஏற்றார்போல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் மாநிலம் முழுவதும் அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இந்தியாவுடையது என அறிவித்தார்.

பாகிஸ்தான் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.   இதனால் அங்கு உணவுப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மக்கள் இந்தியத் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பது வழக்கமாகும்.  தற்போது பாகிஸ்தான் அரசு இந்தியத திரைப்படங்களுக்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து பிரபல திரைப்ப்ட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தனது டிவிட்டரில், “முதலிடு செய்ய தங்கம் வேண்டாம்.  அதை மறந்து விடுங்கள்.  இந்திய திரைப்பட சிடிகளில் முதலீடு செய்யுங்கள்.  விரைவில் அவற்றுக்கு நல்ல கிராக்கி இருக்கும்” என பதிந்துள்ளார்.