மேஷம்
நீங்க வியாபாரியா? அப்படின்னா நண்பர்களின் ஆதரவு கிடைக்குங்க. புதுப்புது முதலீடு களில் ஈடுபட்டு லாபம் பார்த்து சந்தோ……….ஷப்படுவீங்க. விவசாயிங்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தினால் வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். புதிய பொறுப்புகளில் நேர்த்தியாகச் செயல்பட்டு பதவி உயர்வும் பாராட்டும் பெறுவீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்குத் திறமையைப் பயன்படுத்திப் புகழ் சேர்த்துக்க இது சரியான சமயம். உங்க உழைப்புக்குத் தகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சினிமா ஃபீல்டில் உள்ளவங்கக்குப் புது ஒப்பந்தங்கள் வீடு தேடி வந்து காலிங் பெல் அடிக்கும். கவனமாய்க் கதவைத் திறங்க. நீங்க பாட்டுக்கு வீடியோ கேம் விளையாடிக்கிட்டே கோட்டை விட்டுடாதீங்க.
ரிஷபம்
எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் இருந்து வந்த தடைகள் தாமதங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். உடனே கார்டைத் தேய்க்கக் கிளம்பி டாதீங்கப்பா. பலப்பலக் காலமாய் நீங்க கனவு கண்டுகொண்டிருந்தபடி கடன் பிரச்சனை மெல்ல மெல்லத் தீரும். கோர்ட், கேஸ் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உண்மையைச் சொல்லப்போனால் சுறுசுறுப்பு அதிகமாகும். மறைமுகமாய் இத்தனை காலம் இருந்து வந்த எதிர்ப்புகள் ஓடி ஒளிஞ்சு காணாமல் போகும். கவுரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லதுங்க. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குறிப்பா அரசியல்வாதிங்களுக்கு இந்த அட்வைஸ் மிக முக்கியமுங்க.
மிதுனம்
மை டியர் மாணவர்களே.. அண்ட் ஆல்சோ மாணவிங்களே.. உங்களுக்குக் கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். நீங்க செய்யாத தப்புக்குப் பழி வருகிறமாதிரி இருக்கும். ஆனால் உண்மை உடனே வெளியே வந்து பிழைச்சுடுவீங்க. பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. பண வரவு நன்றாகத்தாங்க இருக்கும். எதுக்கு வீணா டென்ஷன் ஆகறீங்க? கொடுக்கல், வாங்கலில் சற்றே கவனமாக இருக்கணும். தட்ஸ் ஆல். மறைமுக எதிர்ப்புகள் உங்களுக்கு டாட்டா பை பை சொல்லிட்டுக் காணாமல் போயிடும், . உற்றார், உறவினர்கள் .. எஸ்பெஷலி உடன் பிறந்தோர்.. பாசத்தோடு பழகுவார்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வீங்க. ஸோ… குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதில் இருந்து வெளிவருவீங்க.
கடகம்
உங்க அப்பா/அம்மா/ ஆசிரியர்கள்/ மேலதிகாரிங்க உங்களுக்குப் பக்க பலமாக இருக்காங்க. அதனால் நீங்க தைரியமாய் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம். அவசர முடிவுகளை எடுத்து டாதீங்க. எதிலும் சற்று யோசித்து செயல்பட்டீங்கன்னா போதும். பணவரவுகள் வருவதில் லே……….சாகத் தாமதம் ஏற்படும். அது பற்றி டென்ஷன் வேண்டாம். சேமிப்பு என்பது சற்று சிரமமான செயலாகவே இருக்கும். இட்ஸ் ஓகே. பொறுமையா வெயிட் பண்ணுங்க. திய வாகனம் வண்டி வாங்கும் எண்ணத்தை சற்று தள்ளி வைங்க. சிறிது காலத்தில் உங்களுக்கே புரியும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவுகள் ஏற்படலாம். அதனால் என்ன? எவ்ளோ வெற்றிகரமாய் முடிச்சு.. மனம் முழுக்க மகிழ்சியோட இருக்கீங்க? அதானே முக்கியம்?
சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 18 வரை
சிம்மம்
மனைவி/ கணவர் வழியில் உள்ள உறவினர் வீடுகளிலிருந்து சுபச் செய்தி உண்டு. பணம் பெருகும். இத்தனை நாள் செலவுகள் பற்றிக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தீங்க. இனி அது கிடையாதுங்க. ஹையா. ஜாலி. மம்மி டாடியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் இத்தனை காலமாய் இருந்துக்கிட்டு வந்த சிறு சிறு பிரச்சனைகள் ஒரு வழியாய் விலகும். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு போயிட்டு வர்றதுக்கு வாய்ப்பு வருமுங்க. குடும்பச் சுமை அதிகரிக்கும். ஆனாலும் சம்பளமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கி யிருக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். பார்ட்னரை நம்புங்க. வெளிநாட்டில் உள்ளவங்க கிட்டேயிருந்து நல்ல செய்தி வந்து மகிழ்ச்சியை லாரி லாரியாய்க்கொடுக்கும். பேரன் பேத்தி பிறக்க வாய்ப்பு உண்டு,
சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை
கன்னி
மனசில் தெளிவு பிறக்குங்க. அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் ஸ்பீடாய் நடக்கத் தொடங்கும். மற்றவர்களின் மனசைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வீர்கள். இதனால உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு விலகும். கையில் பணம் தாராளமாய்ப் புழங்கும். பிடிவாதப் போக்கைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளப்போறீங்க. வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கைக்கு வந்து சேரும். அல்லது நீங்கள் வாங்கியிருந்த கடன்களை ஒழுங்காய்த் திருப்பிக் கொடுப்பீங்க. கோர்ட் கேஸ் மற்றும் வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அலுவகத்தில் அல்லது பிசினஸ்ஸில் சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும்.
சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 23 வரை
துலாம்
மனசில் இருந்துக்கிட்டு கவலைகள் எல்லாமே படிப்படியாகக் குறையுங்க. தடைபட்டிருந்த பயணங்களை மறுபடியும் மேற்கொள்ள வேளை வரும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். அனேகமாக அவங்க பக்கத்திலிருந்துதான் வெள்ளைக்கொடி பறக்கும். எனவே உங்க கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். பண விவகாரங்கள் / நிதி இருப்பு/ வரவு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வாங்க. கடன் கொடுக்கல், அல்லது அவற்றி வசூலித்து வாங்கல் போன்ற விஷயங்கள் சக்ஸஸ். பல காலமாய் நிலவிக்கொண்டிருந்த பகைகள் முடிவடையும். எல்லாரும் நம்மை மதிக்கறாங்களேன்னு வார்த்தைங்களை வெளிவிடாதபடி.. பொதுவாகவே மற்றவர்களிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவைங்க.
விருச்சிகம்
கணவன் வழி/ மனைவி வழி உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். இதனால இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த பகை உணர்ச்சி மறைஞ்சே போகும். இத்தனை காலம் டென்ஷன் குடுத்துக்கிட்டிருந்த ஆரோக்யம் சிறப்பாக அமையும். சிலருக்குப் புது வீடு கட்டிக் குடியேறும் அதிருஷ்டம் வாய்க்கும். குலதெய்வ வழிபாடு நிறைவேறுங்க. இதனால மனசில் நிம்மதி பெற முடியும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபட்டு மன அமைதி காண வழி ஏற்படும் . நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி அதிகாரிங்களின் ஆதரவும் கிடைக்குமுங்க. தற்போது செய்து வரும் தொழிலில் வளர்ச்சியும் வருமானமும் திருப்தி தரும்.
தனுசு
பெண்டிங்கில் போட்டிருந்த செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க பார்ப்பீர்கள். அதற்கான உதவிங்களும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீங்க. பெரியோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். நண்பர்கள் என்று நீங்க இத்தனை காலம் நினைச்சுக்கிட்டிருந்தவங்களோட சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீங்க. தயவு செய்து அவங்க கிட்ட அதிகக் கடுமை காட்டாதீங்க. ஜஸ்ட் அவங்களையும் அவங்க செயல்களையும் மறந்துட்டு அடுத்த வேலையைக் கவனிச்சுக்கிட்டுப்போயிக்கிட்டே இருங்க. புதிய முயற்சிகள் வெற்றிகரமாய் முடிஞ்சு உங்க முகம் முழுக்கப் புன்னகை விரியுங்க. அதிக உற்சாகம் வேண்டாம். அடுத்தடுத்த கடமைங்களை முடிக்கப் பாருங்க.
மகரம்
குடும்ப வருமானம் சீராக இருக்கும். பெரிய அளவில் அதிகரிக்கவும் செய்யாது.. குறையவும் குறையாது. விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. அங்கே உங்களை நல்ல படியாக, கௌரவமாய் நடத்துவாங்க. உங்களோட முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். இத்தனை நாளாய் டென்ஷன் கொடுத்துக்கிட்டிருந்த கடன்களைத் திருப்பி அடைச்சுப் புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் மட்டுமில்லாமல் முன்பிருந்ததுபோல் பலமும் பெரும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், உங்களுடைய நியாயமான உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாதுங்க. மனம் விரும்பிய காரியங்களை செய்ய முடியும்.
கும்பம்
குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். குறிப்பாய்க் கணவன் மனைவி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருப்பீங்க. வெளி மனிதர்கள் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யுங்க. அது போதும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தையில் பொறுமையும், கவனமும் அவசியம். வார்த்தைகளை அதி ஜாக்கிரதையாய்ப் பயன்படுத்துங்க. தெய்வ அனுக்கிரகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டுங்க. ஆன்மிக பயணம் மேற்கொள்வீங்க. மகான்களின் தரிசனம் பெறுவீங்க. இதனால் மன நிம்மதி அடைவீங்க. சுப நிகழ்ச்சிகள் தொடர்பாக அலைச்சல் செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். வெயிட் செய்யுங்க. உத்யோகத்தில் மாறுதல் விரைவில் உண்டு… அது உங்களின் விருப்பப்படியே அமையும்.
மீனம்
மனதில் இருந்துவந்த பயம் பதற்றம் போன்றவற்றை காணாமல் போவதால் நிம்மதியும் மகிழ்ச்சியும் காண்பீர்கள். விஐபிகளின் அறிமுகமும் ஆதரவும் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகர மான திருப்பங்கள் உண்டாகும். வெளிநாட்டில் உள்ள/ திருமணமான குழந்தைங்க வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாங்க. கொஞ்சம் வெறிச்சென்றுதான் இருக்கும். என்றாலும் நீங்க சமாளிச்சுக்கிட்டு நிமிரக் கேட்கணுமா என்ன? திடீர்னு உங்க புகழும் பெருமையும் அதிகரிக் கும். கொஞ்சமும் அலட்டல் இல்லாமல், அடக்கத்துடன் அதை ஃபேஸ் பண்ணுவீங்க. அம்மாவின் உடல் நிலையில் டென்ஷன் இருந்தால் டோன்ட் ஒர்ரி. முறையான சிகிச்சை காரணமாய் அம்மா நல்லா ஆயிடுவாங்க.