எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார் .இந்த படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
‘‘மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்’’ என்று டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகிறார், .
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel