
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த பிரியதர்ஷினி படமாக எடுக்கிறார்.
இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா பற்றிய வெப் சீரிஸ் தயாரித்து வருவதாகச் செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் தனது படத்தை ஆரம்பித்துவிட்டார். இதில் கங்கணா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel