சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27,896-க்கு விற்பனையாகிறது.
சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு பவுன் ரூ.26,480 ஆக இருந்தது. மறுநாள் அதிரடியாக பவுனுக்கு ரூ. 584 அதிகரித்து ரூ. 27,64 ஆனது. இதன் மூலம் பவுன் ரூ. 27 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் படைத்தது. அதை தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 352 அதிகரித்து ரூ. 27,680 ஆக இருந்தது.
இன்று மேலும் ரூ. 216 உயர்ந்துள்ளது. பவுன் ரூ. 27,896 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ. 28 ஆயிரத்தை நெருங்கியது. கிராமுக்கு ரூ. 27 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 3,487-க்கு விற்கிறது. கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை 5 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,416 உயர்ந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியில் வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ 45,700-ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 45.70-க்கு விற்கிறது.