டில்லி:

நாடு முழுவதும்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதார். அதை தடுப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள்  தெரி வித்து உள்ளன. 2012ம் ஆண்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய டில்லி  நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்திற்கு பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்து உள்ளதாக, பதிவான புகார்களின் அடிப்படையில் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 3.12-ஆகவும், அமெரிக்காவில் 38.55-ஆகவும், ஸ்வீடனில் 56.69-ஆகவும் உள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவித்து உள்ளது.

இந் தநிலையில், அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாகவும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.