சென்னை:

மிழக சட்டமன்றத்தின் இன்று மானிய கோரிக்கை விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. முதல்வர் எடப்பாடி மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே விவாதங்கள் நடைபெற்றன.

இன்றைய கேள்வி நேரத்தைத் தொடர்ந்து,  சட்டமன்ற இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் வெற்றி குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

திமுக பொன்முடி:

விவாதத்தில் பேசிய பொன்முடி, 37 மக்களவை தொகுதிகளில் மக்கள் திமுகவுக்கு ஆதரவை தந்துள்ளது என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி:

அப்போது குறுக்கிட்டு, பதிலளித்த முதலமைச்சர், சக்கரம் மேலே போகும், கீழேயும் வரும், 2021ம் ஆண்டில் அதிமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார்.

ஸ்டாலின்:

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என, சக்கரம் கதை மூலமாக முதலமைச்சர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து என்றும், விரைவில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் போகிறோம் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி:

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தேர்தல் நேரத்தின்போது,  திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதியில் ஏமாந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.

ஸ்டாலின்:

இடைத்தேர்தலில் 13 இடங்களில் மக்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என்று கூறி, 13 பெரிதா 9 பெரிதா என கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிச்சாமி:

ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட வாங்க முடியாத திமுக இப்போது எப்படி வெற்றி பெற்றது எனக் கேள்வி எழுப்பிய முதல்வர்,  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித்தந்து திமுக வெற்றி பெற்றுள்ளது, திமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்களை ஏமாந்துவிட்டனர் என்றார்.

செல்லூர் ராஜூ

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,  வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என தான் சொல்லமாட்டேன் என்றவர்,  கலைஞரின் மகன் என அடிக்கடி சொல்லும் மு.க.ஸ்டாலின், நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என உறுதியளித்து மக்களை ஏமாற்றி வாக்கை பெற்றார் என்றார்.

மு.க.ஸ்டாலின்

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நங்கள் சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றார்.

பொன்முடி:

தொடர்ந்து பேசிய பொன்முடி, தேர்தலில் வாக்காளர்கள் தெளிவான முடிவையே எடுத்துள்ளனர். அவர்கள் ஏமாளிகள் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி:

அதையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சிக்கு வர மறைமுகமாக எப்படி திமுக திட்டம் போட்டது என அனைவருக்கும் தெரியும் என்றும்  திமுக.,வின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என்றார்.

இவ்வாறு காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.