சென்னை: தமிழக தலைநகரின் முதல் திடக்கழிவு எரித்தொட்டி, மணலி பகுதியில் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் அதுபோன்ற எரித்தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தப் பகுதியில் குறைந்தபட்சம் 2 திடக்கழிவு எரித்தொட்டியை அமைப்பது என முன்பே திட்டமிடப்பட்டது. அதேசமயம், சேரும் கழிவுகளின் அளவைப் பொறுத்து, அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

இப்போதைய நிலையில், இதுபோன்று 30 எரித்தொட்டிகள் வரை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. மணலியில், முதன்முதலாக, 10 டன் உலர்ந்த குப்பைகளை கையாளும் வகையில் எரித்தொட்டி அமைக்கப்படும். இந்தக் குப்பைகளை எரிப்பதன் மூலமாக கார்பன் சாம்பல் உற்பத்தி செய்யப்படும்.
இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் நேராது. இந்த சாம்பலை, தரைப்பாதை போடுவதற்கு பயன்படுத்தப்படும் கற்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.

மேலும், மாதவரம் பிராந்தியத்தில் 3 வெவ்வேறு இடங்களில் குறைந்தபட்சம் 3 எரித்தொட்டிகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. 10 டன் குப்பைகளை கையாளும் தொட்டிக்கு ரூ.70 லட்சமும், 15 டன் குப்பைகளை கையாளும் தொட்டிக்கு ரூ.90 லட்சமும், 20 குப்பைகளைக் கையாளும் தொட்டிக்கு ரூ.1 கோடியும் செலவாகும் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]