னாஜி

பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தமைக்கு வருந்துவதாக கோவா முன்னேற்ற கட்சி தலைவர் விஜய் சர்தேசாய் கூறி உள்ளார்.

கடந்த 2017 கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கோவா முன்னேற்றக் கட்சி பிரசாரம் செய்து வந்தது. அதன் பிறகு அக்கட்சி பாஜகவின் அமைச்சரவையில் இணைந்தது. ஆயினும் இரு கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிறகு புதிய முதல்வராக பிரமோத் சாவ்ந்த் பத்வி ஏற்றதில் இருந்து கருத்து மோதல் மேலும் வளர ஆரம்பித்தது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது இந்தக் கட்சி நீக்கபட்டு சுயேச்சை உறுப்பினர் ரோஹன் காண்டேவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

இதை ஒட்டி கோவா முன்னேற்ற கட்சியின் தலைவரும் முன்னாள் கோவா முதல்வருமான விஜய் சர்தேசாய், “மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு பிறகும் நாங்கள் பாஜவில் இணைந்து இருந்தமைக்கு வருந்துகிறோம். பாஜக அரசியல் மரபை கொன்று விட்டது. இனி நாங்கள் பாஜகவுடன் இணைந்து இருக்கப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.