ஸ்லாமாபாத்

ப்பிள் பழத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு பாகிஸ்தானிய தொலைக்காட்சி தொகுப்பாளினி உளறி உள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் உலகப் புகழ்பெற்றதாகும். ஐ ஃபோன், கம்பியூட்டர் என தொலைதொடர்பு சாதனங்களில் முதல் இடத்தை பிடித்த அந்த நிறுவனத்தை அறியாத மக்கள் கிடையாது. ஆனால் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி அதுவும் வர்த்தக துறை குறித்த நிகழ்வு நடத்தும் பெண்ணுக்கு அது தெரியாமல் உள்ளது.

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தொழில் வளர்ச்சி குறித்த பேட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒரு தொழிலதிபர் வர்த்தகத்தில் மிகவும் முன்னிலையில் இருப்பது ஆப்பிள் மட்டுமே எனவும் இந்த வர்த்தகம் பாகிஸ்தான் மொத்த வருமானத்தை விட அதிகம் எனவும் குறிப்பிட்டார்.

அவருடன் உரையாடிய அந்தப் பெண் தொகுப்பாளினி, “ஆம் நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஆப்பிளில் பலவகை உண்டு. சுவையில் ஒவ்வொன்றும் அருமையானது” என கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தொழிலதிபர் ஆப்பிள் என தான் குறிப்பிட்டது பழம் இல்லை எனவும் நிறுவனம் எனவும் கூறியதும் அந்த பெண்ணின் முகம் அவமானத்தில் வாடியது.

 

இந்த வீடியோ டீவிட்டரில் பகிரப்பட்டு பலரும் அந்த தொகுப்பாளினியை கிண்டல் செய்த வண்ணம் உள்ளனர்.