ரிட்ஜெர்சட்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலி 7.1 ஆக பதிவாகி உள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரிட்ஜெர்செட் என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் கலிபோர்னியாவை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது. நிலநடுக்கத்துக்குப் பின்னர் 1,700 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வானது சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதி அருகே மையமாக கொண்டு ஏற்பட்டது. ஒவ்வொரு முறை நில அதிர்வு ஏற்படும் போதும் ஒட்டுமொத்தமாக கட்டிடங்கள் குலுங்கிக் கொண்டே இருந்தன என்றும் பீதியுடன் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பல இடங்களில் வாயு கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும் பல இடங்களில் சாலைகள் பிளவுபட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.