லண்டன்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், ஹிட் விக்கெட் முறையில் அவுட்டான பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக், இந்த உலகக்கோப்பை தொடரில் அம்முறையில் அவுட்டான இரண்டாவது வீரரானார்.

சரியாக 100 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார் இமாம்-உல்-ஹக். இதற்கு முன்னர், இதே தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.

உலகக்கோப்பை தொடரில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தவர்களில் மார்ட்டின் குப்தில் 10வது வீரராகவும், இமாம்-உல்-ஹக் 11வது வீரராகவும் திகழ்கின்றனர்.

இதற்கு முன்னர், கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார். அவர் ஒன்பதாவது வீரர்.

உலகக்கோப்பை போட்டிகளில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தவர்களின் பட்டியல்

* ஆர் ஃபிரடெரிக் (மேற்கிந்திய தீவுகள்) – 1975 (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)
* எஃப் டென்னிஸ் (கனடா) – 1979 (இங்கிலாந்துக்கு எதிராக)
* எம் ஒடும்பே (கென்யா) – 1996 (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக)
* ஜி கிர்ஸ்டன் (தென்னாப்பிரிக்கா) – 1996 (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக)
* ஜே ஹேரிஸ் (கனடா) – 2003 (இலங்கைக்கு எதிராக)
* எம் ஒடும்பே (கென்யா) – 2003 (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக)
* வி சிபன்டா (ஜிம்பாப்வே) – 2007 (அயர்லாந்துக்கு எதிராக)
* ஆர் சகப்வா (ஜிம்பாப்வே) – 2015 (யுஏஇ அணிக்கு எதிராக)
* மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்) – 2015 (அயர்லாந்துக்கு எதிராக)
* மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) – 2019 (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக)
* இமாம் உல் ஹக் (பாகிஸ்தான்) – 2019 (வங்கதேசத்துக்கு எதிராக)

இப்பட்டியலில், கென்யாவின் ஒடும்பே, உலகக்கோப்பை போட்டிகளில் 2 முறை ஹிட் விக்கெட்டான பெருமையைப் பெறுகிறார்..!‍