2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.இதில் வருமான வரி இலக்கு உயர்த்ததப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பான்கார்டு இல்லாவிட்டாலும், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம் என்று அறிவித்து உள்ள நிதி அமைச்சர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும் என்று கூறினார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படுகிறது.
ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு வருமான வரி இல்லை. வருமான வரிக்கணக்குகளை இனி டிஜிட்டல் முறையில் பரிசோதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
தற்போது நடைமுறையில், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் பெறுவர்கள் ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை. மீதமுள்ள இரண்டரை லட்சத்துக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும். அதன்படி, ஆண்டுக்கு ரூ. 12,500 வரி செலுத்த வேண்டியது கட்டாயமாக இருந்தது. மேலும், ஆண்டுக்கு 6.5 லட்சம் வருமானம் பெறுபவர்கள் தங்களது வருமானத்தில் இருந்து 1.5லட்சம் முதலீடு செய்து இருந்தாலும் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது வருமானஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் மீதான மேலும் ஒன்றரை லட்சம் அளவுக்கான கடன் மீதான, வட்டிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவத, குடியிருக்கும் வீடுகள் அதாவது தற்போது வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள தொகையை காட்டிலும் கூடுதலாக ஒன்றரை லட்சம் ரூபாயை இனி, கணக்கில் காட்டிக்கொள்ளலாம்.
உரிமையாளர்கள், தாங்களே குடியிருக்கும் வீடுகளுக்குதான் இது பொருந்தும். வாடகைக்கு வீடுகளை விட்டிருந்தால் கிடையாது.
குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு மேலும் 1.5 லட்சம் வரிச்சலுகை தரப்படும் எனவும் பட்ஜெடில் தெரிவிக்கப்படுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான கடனுக்கான வட்டியிலும், ஒன்றரை லட்சம் ரூபாய் வரி சலுகை உள்ளது. எலக்ட்ரிக் வாகனத்தை கடன் மூலமாக வாங்குபவர்கள், அவர்கள் செலுத்தக்கூடிய வட்டியில் ஒன்றரை லட்சம் ரூபாயை வருமான வரி செலுத்தாமல் விலக்கு பெற கணக்கு காட்டிக்கொள்ளலாம். எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால் கலால் வரியும் கிடையாது என்றும், ஆனால், எலக்டிரிக் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி 12 % கீழ் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் ஒரே வங்கியில் பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ. 5 கோடி வரை உள்ளவர்களுக்கு கூடுதல் வரி 3 சதவீதம் (சர்சார்ஜ்),
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 7 சதவீதம் கூடுதல் வரி (சர்சார்ஜ்) விதிக்கப்படும்.
மேலும் வருடத்திற்கு ரூ.5 கோடி மேல் வருமானம் பெறும் நபர்களுக்கு தற்போதைய வரியிலிருந்து 75 கூடுதலாக வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ரூ.400 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.