சென்னை
காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்துக்காக சிறப்பு ரெயில் சேவைகள் நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் சிலை 40 அண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். இந்த வருடம் இந்த வைபவம் நடந்து வருகிறது. நான்கு நாட்களாக நடந்து வரும் இந்த அத்தி வரதர் தரிசன வைபவத்தில் சுமார் 3.45 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த வைபவம் தொடங்கியதில் இருந்து பல விதி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தரிசனம் தொடங்கிய முதல் நாளே 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு வெளியூரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கை எடுத்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது. அத்துடன் துல்லியமாக பக்தர்கள் எண்ணிக்கையை எண்ணும் கருவி தற்போது பொருத்தப்பட்டுள்ள்து.
இந்த அத்தி வரதர் தரிசனத்துக்கு வரும் பக்தரகளுக்காக சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கபட உள்ளன. இந்த விவரங்கள் பின் வருமாறு. யக்கப்படவுள்ளன.
முதல் சிறப்பு மின்சார ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.05 மணிக்கு காஞ்சிபுரத்தை சென்றடையும்.
இரண்டாவது சிறப்பு மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு காலை 7.15 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும்.
மூன்றாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரத்தை சென்றடையும்.
நான்காவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும்.
ஐந்தாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு காஞ்சிபுரத்தை சென்றடையும்.
ஆறாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும்.
அதேபோல, மறுமார்க்கமாக காஞ்சிபுரத்தில் இருந்து 6 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
முதலாவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.
இரண்டாவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.
மூன்றாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.
நான்காவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.
ஐந்தாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தை வந்ததடையும்.
ஆறாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்