சென்னை:

ந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரியை ஆபாசமாக படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அறநிலையத்துறை இணை ஆணையர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்மீது  3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டலத்தின் இணை ஆணையராக இருப்பவர்  பச்சையப்பன். இவர்மீது, அவரின் கீழ் பணியாற்றும் பெண் அதிகாரி, பாலியல் புகார் அளித்துள் ளார். அதில்,  கடந்த மாதம் 28-ஆம் தேதி அமாவாசை மண்டல பூஜையை முன்னிட்டு  சதுரகிரி மலைக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றதாகவும், அங்கு தான் பணி நிமித்தமாக  சென்றிருந்தபோது அங்கிருந்த,  அறநிலையத்துறை ஓய்வறையில் உள்ள குளியல் அறையில் குளித்ததாகவும், ஆனால்,  குளித்து முடித்த பின்பே அங்கு பேனா காமிரா இருந்ததை கண்டு பிடித்ததாகவும், அந்த காமிராவில் தான் குளித்தது அனைத்தும் பதிவாகியிருந்தது தெரிய வந்ததாகவும் கூறி உள்ளார். மேலும்,  பச்சையப்பன் தன்னிடம் அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தி வந்ததாகவும் கூறி உள்ளார்.

அவரது புகாரின் பேரில், இணை ஆணையர் பச்சையப்பனை மதுரை மாவட்டம் பேரையூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், இழிவுபடுத்துதல், மானபங்கப் படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

[youtube-feed feed=1]