விஜயவாடா
தென் மத்திய ரெயில்வே தங்கள் பகுதியில் பெண் காவல்துறையினர் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.
தென்னக ரெயில்வேயின் ஒரு அங்கமாக இருந்த தென் மத்திய ரெயில்வே மகாராஷ்டிரா, தெலுங்கானா, மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த பிரிவு கடந்த 1962 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தொடங்கப்பட்டதாகும்.
இந்த பகுதியில் ஓடும் ரெயில்களில் பெண்கள் பெட்டிகளில் ஆண்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு பயணம் செய்த 1.4 லட்சம் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இவ்வாறு பயணம் செய்வது குறையவில்லை.
இந்நிலையில் இதை தடுக்க இனி இந்த பகுதிகளில் பெண்கள் பெட்டியிலும் மற்றும் ரெயில் நிலையங்களிலும் அதிக எண்ணிக்கையில் பெண் காவல்துறையினரை பணி அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணம் செய்வதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.