தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படுவது போல பல கிராமங்களில் சேவல் சண்டையும் நடத்தப்படும்.
இதற்காக கண்காட்சி நடத்தப்பட்டு சேவல்கள் விற்பனை செய்யப்படுகிறது. பாரம்பரிய சேவல்களை காப்பாற்றும் நோக்கில் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது.
நாட்டு கோழிகள் பட்டியலில் விஷேச வகை கிளிமூக்கு சேவல் , விசிறிவால் சேவல்களும் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் இன்று திருச்சியில் திருச்சி மாவட்ட கிளிமூக்கு விசிறிவால் சேவல் வளர்ப்பாளர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு சேவல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் இடம் பெற்ற சேவல்களை காண வந்த பார்வையாளர்கள் சேவல்களில் இத்தனை ரகங்களா? என ஆச்சரியத்துடன் வியந்தனர்.
Patrikai.com official YouTube Channel