
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் `லாபம்’ படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
இப்படத்திற்காக புதிய கெட்டப்பபில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Patrikai.com official YouTube Channel