
லண்டன்: உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியடையாத அணிகளுள் ஒன்றாக இருந்துவரும் நியூசிலாந்தை, 237 ரன்களுக்குள் மடக்கியுள்ளது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதும் ஆட்டம் தற்போது நடந்துவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் நீஷம், கிராண்ட்ஹோம் மற்றும் வில்லியம்ஸ் போன்றோர் சிறப்பாக ஆடினாலும், அந்த அணியால் 237 ரன்களைத் தாண்ட முடியவில்லை. நீஷம் வெறும் 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அந்தளவிற்கு சிறப்பாக இருந்தது. ஷகீன் அஃப்ரிடி அற்புதமாக பந்துவிசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் 10 ஓவர்களில் கொடுத்த ரன்கள் வெறும் 28 மட்டுமே.
238 என்ற எளிமையான இலக்கை நோக்கி பயணத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, மிக நிதானமாக ஆடி வருகிறது. பாகிஸ்தானின் பாபர் ஆஸம் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வருகிறார்.
இன்றையப் போட்டியில் வெல்லும் பட்சத்தில், அரையிறுதியில் நுழைவதற்கான பாகிஸ்தானின் வாய்ப்பு சற்று கூடும் என்பது தெளிவு.
[youtube-feed feed=1]