டில்லி

ச்சநீதிமன்ற தாலிமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகளில் ஓய்வு வயதை 65 ஆக அதைகரிக்க பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு நீதிபதிகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதும் ஒரு முக்கிய காரணமாகும். ஏற்கனவே பணியில் உள்ள நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு உடனடியாக புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவது இல்லை. இதனால் 24 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இது குறித்து பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதி உள்ளார். “தற்போதுள்ள நிலையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கு முக்கிய காரணம் நீதிபதிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகும். தற்போது உயர்நீதிமன்றங்களில் 399 நீதிபதி பதவிகள் அதாவது 37% காலியாக உள்ளன. இந்த பணி இடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். அதே நேரத்தில் இவ்வாறு நிரப்பப்படும் பணி உடனடியாக நிறைவடையாது.

இவ்வாறு புதிய நீதிபதிகளை தேர்வு செய்யும் பணி நடக்கும் சமயத்தில் ஏற்கனவே உள்ள அனுபவம் மிக்க நீதிபதிகளையும் நாம் பயன்படுத்துக் கொள்ளலாம். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணி இடங்களை நிரப்புவதுடன் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதையும் 65 ஆக அதிகரிக்க வேண்டும்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.