ரஷியா நாட்டின் செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் போலார் பனிக்கரடி ஒன்று நுழைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது. பசி காரணமாக அந்த துருவக்கரடி (பனிக்கரடி) உணவைத் தேடி நகருக்குள் நுழைந்துள்ளது.
பனி நிறைந்த கடற்கரை ஆற்றுப்பகுதிகளில் காணப்படும் பனிக்கரடி கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகள் நகரின் மையப்பகுதியில் சுற்றி திரிந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். இது உள்ளூர் ரஷ்யர்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது மற்றும் அதிகாரி களுக்கு சிக்கலையும் உருவாக்கியது.
இதுகுறித்து கூறிய வனவிலங்கு ஆர்வலர் ஒலேக் ஷிரேஷ்வேகை, இந்த பெண் பனிக்கரடியாது நோரில்ஸ்கில் இருந்து சுமார் 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்து நகருக்குள் வந்திருப்பதாக தெரிவித்து உள்ளார். பெரும்பாலும் ஆர்க்டிக் வட்டத்திற்குள் தொலைதூர நகரமான நோரில்ஸ்கில் இருந்து உணவைத் தேடி வந்திருப்பதாகவும், ஆர்ட்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டு உ உள்ள பருவநிலை மாற்றம் காரணமாக போதிய உணவு கிடைக்காமல் உணவு தேடி இடம் பெயர்ந்து நகருக்குள் வந்திருக்கலாம் அல்லது வழிதவறி நகருக்குள் நுழைந்திருக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
40 ஆண்டுக்கு பிறகு போலார் பனிக்கரடி செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் சுற்றித்திரிவது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.