கோவை:

ணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஓடும் காரில் இருந்து தனது மனைவியை கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் அவரது கணவர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்அப் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில்,  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்த்தி காரில் இருந்து கிழே தள்ளப்பட்ட காட்சிகள்

கோவையில் உள்ள துடியலூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் அருண்ஜோ அமல்ராஜ், ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு 2 அழகான பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும், இதன் காரணமாக ஆர்த்தி அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்வதுமாக இருந்து வந்துள்ளார்.

இவர்களின் தகராறு முற்றிய நிலையில், கடந்த மாதம்  ஆர்த்தி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, மும்பையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் அமல்ராஜ் அவரை சமாதானம் செய்து மீண்டும் கோவைக்கு அழைத்து வந்துள்ளார்.

அமல்ராஜ் தனது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அமல்ராஜின் பெற்றோருக்கும், ஆர்த்திக்கும் ஒத்துப்போகாததால், அமல்ராஜ் பெற்றோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, ஆர்த்தியை துன்புறுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 5ந்தேதி  அமல்ராஜ், தனது மனைவி மற்றும் குழந்தை  ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கியிருந்தபோதே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்த்தி ஊட்டி காவல்நிலையில், புகார் கொடுக்க, அவர்கள் வழக்கு பதிவு செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்த கடந்த 9ந்தேதி அவர்கள் கோவை திரும்பிய நிலையில், காரில் வரும்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரம் அடைந்த அமல்ராஜ், தனது மனைவியை  ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அப்போது அந்த வழியே வந்தவர்கள், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆர்த்திக்கு உதவி செய்தனர். இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப்பிலும் வைரலானது. இதையடுத்து, துடியலூர் போலீசார் பல்வேறு பிரிவுகளில் அமல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காரில் இருந்து, தள்ளிவிடப்பட்ட ஆர்த்திக்கு உடலில் சில காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரது தனது தாய் வீடான மும்பைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்த்தி,  தனது கணவர் கொடுமைக்கு காரணம,  தன்னுடைய  மாமனார், மாமியார் ஆகியோர் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.