புதுடெல்லி:
மோடி அமைச்சரவையின் சராசரி வயது 60-ஆக உள்ளது.
இளைஞர்களுக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வேலை என்பது எல்லாம் வெறும் கோஷமாகியிருக்கிறது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க இன்னும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 40 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 12% மட்டுமே உள்ளனர்.
நம் நாட்டின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதுக்குக் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
57 பேர் கொண்ட மோடி அமைச்சரவையில் அங்கம் வகிப்போர் சராசரி வயது 60.
முதல் 2 மக்களவை தேர்தலில் 164 இளம் எம்பிக்கள் (25 முதல் 40 வயது வரை) வெற்றி பெற்றனர்.
1984-ம் ஆண்டிலிருந்து மக்களவையில் இளைஞர்களுக்கான வாய்ப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போய்விட்டது.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பாக 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே 40 வயதுக்கு கீழானவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.