டில்லி:
நீட் தேர்வு முடிவுகள் மாலை4 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2 மணிக்கே தேசிய கல்வி முகமை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில் அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி. தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தமிழக மாணவ,மாணவிகள் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் இதனை ntaneet.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
தொடர்ந்து மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகிறது
Patrikai.com official YouTube Channel