சென்னை

ன்று முதல் 7 ஆம் தேதி வரை பராமரிப்பு பணி காரணமாக சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரெயில்வே சென்னை – திருத்தணி மார்க்கத்தில் பராமரிப்பு பணிகளை இரவு நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று முதல் 7 ஆம் தேதி வரையிலான மூன்று தினங்களுக்கு இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “செண்டிரல்- திருவள்ளூர் இடையே இரவு 8.55, 9.40 11.10, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், செண்டிரல்- அரக்கோணம் இடையே இரவு 9.15, 10.10, 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று மற்றும் 5, 6, 7ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

செண்டிரல்- ஆவடி இடையே இன்று இரவு 9.50 மணிக்கும், சென்னை கடற்கரை-ஆவடி இடையே இன்று இரவு 9.45 மணிக்கும், அரக்கோணம்- செண்டிரல் இடையே இன்று இரவு 6.55, 9.25, 9.45 மணிக்கும், திருவள்ளூர்- செண்டிரல் இடையே இன்று இரவு 8.50, 9.55, மணிக்கும், திருவள்ளூர்- ஆவடி இடையே இன்று இரவு 10.10 மணிக்கும், திருத்தணி- செண்டிரல் இடையே இன்று இரவு 9.45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதற்கு பதிலாக செண்டிரல்- ஆவடி இடையே இன்று மற்றும் 5, 6, 7ம் தேதிகளில் இரவு 10.10, 10.15 மணிக்கும், செண்டிரல் – அரக்கோணம் இடையே இரவு 11.45, 11.50 மணிக்கும், வேளச்சேரி- ஆவடி இடையே இன்று இரவு 9.05 மணிக்கும், செண்டிரல்- திருவள்ளூர் இடையே இன்று இரவு 11.55 மணிக்கும், திருவள்ளூர்- ஆவடி இடையே இரவு 10.55 மணிக்கும், திருவள்ளூர்- செண்டிரல் இடையே இன்று இரவு 10 மணிக்கும், அரக்கோணம்- செண்டிரல் இடையே இன்று இரவு 10.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இன்று மற்றும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் திருவள்ளூர்- ஆவடி இடையே இரவு 10.55 மணிக்கும், திருத்தணி- செண்டிரல் இடையே இரவு 10 மணிக்கும், அரக்கோணம்-மூர்மார்க்கெட் இடையே இரவு 10.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே நாளை 11.59 மணிக்கு இயக்கப்படும் ரயில், தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு நாளை இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. “ என அறிவிக்கப்பட்டுள்ளது.