சென்னை:

சாலையின் தரம் குறித்த பரிசோதனைக்குப் பிறகுதான் கான்ட்ராக்டருக்கு பணம் கொடுக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


15 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்ட இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் உதவி நிர்வாகிகளுக்கு, சாலையை சோதனையிடுவது, பல்வேறு கட்டங்களில் டிஜிட்டல் முறைப்படி சோதிப்பது, சாலை வடிவமைப்பு, சாலை போட்டுக் கொண்டிருக்கும்போது நடத்த வேண்டிய சோதனைகள், எந்த வகை சாலை போடப்படுகிறது என்ற விவரம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறும்போது, சாலையின் தரத்தை மண்டல அளவிலான அதிகாரிகள் பரிசோதிப்பார்கள்.

சாலையின் தரம் குறித்து அறியும் வகையில் 4 பரிசோதனைகள் நடத்தப்படும். சாலை தரமானதாக இருந்தால் மட்டுமே கான்ட்ராக்டருக்கு பணம் தரப்படும்.

இந்த முறையைப் பின்பற்றினால் போடப்படும் சாலை 5 ஆண்டுகள் வரை தரமானதாக இருக்கும் என்றார்.