சென்னை:

மிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம்,  சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,   வெய்ட் அண்ட் சீ என்று கூறினார்.

இனிமேல் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு,  சட்டமன்றம் கூடும்போது நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தொலைக்காட்சியிலும் அதை ஒளிபரப்பத்தான் போகிறார்கள் என்று தெரிவித்தார்.

எடப்பாடி அரசு மீது  நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வருமா? என்ற கேள்விக்கும், சட்டசபை கூடும்  தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அது  அறிவித்த பிறகு அகுறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

[youtube-feed feed=1]