பாக்தாத்:

ஈரான் மீது அமெரிக்கா எத்தகைய போரை தொடுத்தாலும் சந்திக்க தயார் என, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் தெரிவித்தார்.


பாக்தாத்தில் ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வளைகுடா நாடுகளுடன் அணுசரித்துப் போக ஈரான் விரும்புகிறது.
ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தத்தில், அந்நாடுகளுடன் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
அது, பொருளாதார போராக இருந்தாலும், ராணுவ போராக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்றார்.

வளைகுடா பகுதியில் எண்ணை கிணற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், ஈராக்குக்கு ஆதரவாக ஈரான் உள்ளது.
ஈரான் மீதான எத்தகைய நடவடிக்கையையும் எதிர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

 

[youtube-feed feed=1]