மும்பை:

இன்சூரன்ஸ் பாலிசியை மகாராஷ்ட்ர போலீஸ் புதுப்பிக்காததால், நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த 15 போலீஸாரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் இழப்பீடு கிடைக்கவில்லை.


மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில்  நடந்த நக்ஸலைட் தாக்குதலில் போலீஸ் கமாண்டோ படையை சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர்.

பணியின் போது உயிரிழக்கும் படையினருக்கு ரூ.20 லட்சம் குரூப் இன்சூரன்ஸை மகாராஷ்ட்ர அரசு போட்டுள்ளது.

ஆனால், இந்த இன்சூரன்ஸை மகாராஷ்ட்ரா போலீஸார் புதுப்பிக்காததால், உயிரிழந்த 15 போலீஸாரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் கிடைக்கவில்லை.

இதனால் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து உயர்மட்ட விசாரணை அமைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.20 லட்சத்தை ஈடு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சில காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மாற்று இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.