பிரபல ஆன்லைன் கடையான அமேஷான் இந்து கடவுகள் உருவம் பொறிக்கப்பட்ட டாய்லட் பேப்பர், மிதியடிகள் போன்றவற்றை விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில்  #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் சமூக தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

உலகளவில் முதலிடத்தை வகிக்கும்  இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், கோடிக்கணக் கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில் பெரும்பாலோர்  சோம்பேறியாகி விட்ட நிலையில், வீட்டை விட்டு வெளியே போக விரும்பாமல், இணையதளம் மூலமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அமேஷானில் விற்பனை செய்யப்படும்  கழிவறை மிதியடி, டைனிங் டேபிள் டவள், ஹேன்பேக், செருப்புகள், ஷோபா உறை என் பல்வேறு  பொருட்களில் இந்து கடவுளின் புகைப்படங்களான சிவபெருமான், விநாயகர் போல பல புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.

இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் அமேஷான் நிறுவனம் இந்த அடாவடி செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, டிவிட்டர் சமூக வலைதளத்தில் #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து ஏராளமானோர், தாங்கள் இனிமேல் அமேஷானில் பொருட்களை வாங்கு வதில்லை என்று முடிவு செய்து, அமேசான் ஆப்-ஐ தங்களது மொபைலில் இருந்து அன்இன்ஸ்டால் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட அமேஷான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாது என்றும்,  சர்ச்சைக்குரிய கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பொருட்களை வாபஸ் பெறும் என்றும் தகவல் பரவி வருகிறது.

ஆனால், இதுவரை அமேஷான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.