பெய்ரூட், லெபனான்

ரான் அதிபர் ஹசன் ரௌகானி அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு இடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தம் சென்ற ஆண்டு முறிவுக்கு வந்தது.     அதை ஒட்டி ஈரானுடன் மற்ற நாடுகள் வர்த்தகம் செய்ய அமெரிக்கா தடை விதித்தது.   அதற்கு அளித்துள்ள கெடு கடந்த 2 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.     இனி ஈரானுடன் வர்ததக்=ம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க உள்ளது.

இந்நிலையில் லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஈரான் அதிபர் ஹசன் ரௌகானி, “கடந்த அண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால்  ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.   இந்த ஒருதலைப்பட்சமான தடையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   எனவே உடனடியாக இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கு நாங்கள் விடுக்கும் கட்டுப்பாடுகளில் முக்கியமானது அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மன், ரஷ்யா ஆகிய நாடுகள்  அந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பதாக இன்னும் 60 நாட்களில் உறுதி அளிக்க வேண்டும்.   அப்படி இல்லை என்றால் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதை விட அதிக அளவில் யுரேனியம் செறிவூட்டும் பணியை நாங்கள் செய்வோம்

இந்த முடிவை அணு ஆயுத ஒப்பந்தத்தை பாதுகாக்கவே நாங்கள் எடுத்துள்ளோம்.    இது குறித்து ஐரோப்பிய நாடுகள் சுயமாக முடிவெடுக்க வேண்டும்.   நாங்கள் இந்நாடுகளுக்கு போதைப் பொருள் மற்றும் அகதிகள் கடத்தலை தடுக்க உதவி வருகிறோம்.   ஆகவே ஐரோப்பிய நடுகள் அமெரிக்காவின் விருப்பப்படி கொள்கை முடிவுகள் எடுத்தால் எங்கள் ஒத்துழைப்பு குலைந்துவிடும்” என அறிவித்துள்ளார்.

இது உலக நாடுகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா ஈரானுடன் ஒத்துழைப்பு அளிக்க ஒப்புக் கொள்வதாக அறிவித்துள்ளது.   சீனாவும் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆனால் பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

[youtube-feed feed=1]