புதுடெல்லி: நரேந்திர மோடி அவர்களே..! போர் நிறைவடைந்துவிட்டது. நீங்கள் செய்த வினைகளுக்கான பலனை அனுபவிக்கும் நேரமும் வந்துவிட்டது எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மேலும், உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள உள்ளார்ந்த எண்ணத்தை, எனது தந்தையின் மீது ஏற்றி நீங்கள் பேசினாலும், உங்களை எதுவும் காப்பாற்ற முடியாது. எனது அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு உரித்தாகட்டும் என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
“தான் இறக்கும்போது நம்பர் 1 ஊழல் பேர்வழியாக இறந்தவர்தான் ராஜீவ் காந்தி. அவர் தூய்மையானவர் என்று மக்களை நம்ப வைக்க, அவரின் குழுவினர் தொடர்ந்து முயன்று வந்தார்கள்” என்று தனது வழக்கமான பாணியில் மிக மோசமாக சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார் நரேந்திர மோடி.
அதற்கான பதிலைத்தான் இவ்வாறு வழங்கியுள்ளார் ராகுல் காந்தி.