ண்டன்

எம் சி சி (மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின்) முதல் பிரிட்டிஷ் அல்லாத தலைவராக குமார் சங்ககாரா தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.

உலக கிரிக்கெட்டில் மிகப் புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப்புகளில் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பும் ஒன்றாகும் .    இந்த கிளப் சுமார் 232 வருடங்களாக நடைபெற்று வருகிறது.   லண்டனில் உள்ள இந்த கிளப்  உலகப் போர் சமயத்தில் ஒரு வருடம் செயல்படாமல் இருந்தது.    மற்ற ஆண்டுகளில் தொடர்ந்து இயங்கி  வருகிறது.

இலங்கை கிரிக்கெட் வீரரான குமார் சங்ககாரா கடந்த 2000ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.   இவர் தனது கிரிக்கெட் வரலாற்றில் 27000 ரன்கள் எடுத்து புகழ்பெற்றவர் ஆவார்.   இவர் 2015 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.   கடந்த 2011 ஆம் ஆண்டு குமார் சங்ககாரா இந்த எம்சிசி கிளப்பின் நிகழ்வு ஒன்றில் பங்கு பெற்றார்.

அதிக ரன்கள் எடுத்த வீரர் வரிசையில் முதலாம் இடத்தில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரும் இரண்டாம் இடத்தில் குமார் சங்ககாராவும் உள்ளனர்.   புகழ்பெற்ற எம்சிசி கிளப்பின் உறுப்பினர்கள் கூட்டத்தில் குமார் சங்ககாரா வின் பெயர் தலைவராக அறிவிக்கப்பட்ட போது அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இது குறித்து குமார் சங்ககாரா, ” கிரிக்கெட் உலகின் தலை சிறந்த கிரிக்கெட் கிளப்புகளில் ஒன்றான ‌மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் தலைவராக பொறுப்பு ஏற்பதில் நான் பெருமை அடைகிறேன்.    நான் இனி. இதனை உலகம் முழுவதும்  கொண்டு சேர்க்க தொடர்ந்து பாடுபடுவேன்,   நான் இந்த பதவியில் அடுத்த ஆண்டு வரை அங்கம் வகிபேன்ன். இந்தப் புதிய பொறுப்பு என்னை சிலிர்ப்படைய செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககாரா இந்த கிளப்பின் தலைவராக வரும் அக்டோபர் 1 முதல் அடுத்த வருடம்  செப்டம்பர் 30 வரை பதவி வகிப்பார்.  இவர் பிரிட்டன் நாட்டை சேராத முதல் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.