டில்லி:

ணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் இன்று டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார்.

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வாக்காளர் களுக்கு பணம்பட்டு வாடா  செய்ய இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நடைபெற்ற அதிரடி சோதனையில்,  கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக  வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிவித்தது. மற்ற தொகுதிகளில்  கடந்த 18ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில்,  தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  இன்று டில்லி சென்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார். அதில்,  ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றும், 4 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் மற்றும் அதிமுக கட்சி கொடியின் நிறம் கொண்ட வேஷ்டியை தொடர்ச்சியாக அமமுகவினர் பயன்படுத்திவருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனுகொடுத்துள்ளார். அதுபேல  ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை மே 19-ஆம் தேதிக்குள் உடனடியாக நடத்த வேண்டும் என்ற திமுக சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.