தேனி:

ட்டுக்கு பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும் என்றும், உன் வாழ்க்கையை கெடுத்துக் கொளளாதே  என்று ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நுகர்வோர் அமைபை சேர்ந்த நபரை மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது… இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் மகன் ரவிந்திர நாத் போட்டியிடுகிறார். அங்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட ஓபிஎஸ் தம்பி உள்ட அவர்களது  குடும்பத்தினர் உள்பட அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருங்கள் வழங்கி வந்தனர்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

தேனி தொகுதியில் , ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை அங்குள்ள மக்களுக்கு விநியோகம் செய்து போன்ற போட்டோ, சேலைகள் பண்டல் பண்டலாக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, அவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓ.ராஜா, நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ ஆடியோ வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் சொந்த ஏரியாவான பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில், பொருள்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரேசன் கடைக்காரர்களிடம் விசாரித்தபோது, இதற்கு காரணம் ஓபிஎஸ் தம்பி, ஓ.ராஜா என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, நுகர்வோர் அமைப்பை சேர்ந்த துரை  என்பவர் ஓ.ராஜாவிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது, ஓ.ராஜா, “ஏன்டா ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறாய்?” என கேட்க, அதற்கு துரை  “நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ஒரு கார்டுக்கு 40 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன்” என சொல்கிறார்..

தொடர்ந்து பதில் அளித்த ஓ.ராஜா,  “நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய். உன் பிழைப்பை மட்டும் பார். எல்லாம் எங்களுக்குத் தெரியும்”   ஒரு மீட்டிங் போட்டு செலவழிக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் ஆகும். அதற்கு நீயா செலவு செய்வாய்? பணம் சேர்க்காமலும் பதவி இல்லாமலும் காரில் போக முடியுமா? ஓட்டுக்கு ரூ.500 வரை பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும். அது போன்ற எங்களுக்கு யார் என்ன செய்கிறார்கள்? என்று தெரியாதா? தேவை யில்லாமல் ரேசன் கடைகளில் பிரச்சனை செய்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று மிரட்டுகிறார்.

இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.