சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலையடுத்து, சென்னை லூகாஸ் பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு வந்த முஸ்லீம்கள், தீவிரவாத செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது என்பது நினைவிருக்கலாம். இதனால், இரண்டு சிறுபான்மையினர் (கிறிஸ்தவர் & இஸ்லாமியர்) மத்தியில் ஒரு இறுக்கமான சூழல் நிலவியது.

எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் திரண்டு தேவாலயம் வந்து, நடந்த சம்பவத்திற்கு தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர்.

“தீவிரவாதத்தால், எப்போதும் எங்களின் ஒற்றுமையை சிதைக்க முடியாது” என்பதான வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை அவர்கள் தங்களின் கைகளில் ஏந்தியபடி வரிசையாக நின்றிருந்தனர்.

முஸ்லீம்களின் இந்த செயல், மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.