டில்லி:
நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஜம்மு காஷ்மீரை தவிர மற்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.
காலை காலை 9 மணி நிலவரப்படி 10.27 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில், தற்போது 11 மணி அளவில் பதிவாகி உள்ள வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.
மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
பீகார் 13.95%
ஜம்மு-காஷ்மீர் 3.69%
மத்திய பிரதேசம் 18.65%
மகாராஷ்டிரா 8.15%
ஒடிசா 10 %
ராஜஸ்தான் – 15.08%
உத்தரபிரதேசம் – 17.69%
மேற்கு வங்கம் – 21.69%
ஜார்க்கண்ட் – 20.87%
இந்த 72 தொகுதிகளில் சுமார் 943 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப் பதிவுக்காக சுமார் ஒரு லட்சத்து 40ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.