டில்லி

டைபெற்று வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நடண்ட சோதனைகளைல்  இதுவரை ரூ.3205 கோடி மதிப்புள்ள பொருட்கள் பிடிபட்டுள்ளன.

மக்களவை தேர்தல் தேதிகள் அறிவித்த உடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. தேர்தலில் வாக்குக்களைப் பெற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் வெகுமதி பொருட்கள் அளிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் ஏராளமான ரொக்கம் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் தொடர்ந்து சோதனை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மக்களவை தேர்தலில் இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 4 கட்டங்கள் பாக்கி உள்ளன. இந்நிலையில் இதுவரை ரொக்கப்பணம் ரூ.778.9 கோடி பிடிபட்டுள்ளது. கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் மொத்தம் பிடிபட்ட ரொக்கம் ரூ.303.86 கோடி ஆகும்.

இதுவரை மொத்தம் ரூ.3205.72 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம், மது, போதை மருந்துகள், தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் அடங்கும். கடந்த 2014 ஆம் வருட தேதலில் தங்கம் மற்றும் எந்த ஒரு விலை உயர்ந்த உலோகங்களும் பிடிபட்டதாக தகவல்கள் இல்லை.

இவ்வாறு நடந்த பறிமுதலில் தமிழகத்தில் அதிக அளவு பறிமுதல் நடந்துள்ளது. இங்கு 3063 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. இது ரூ.708.71 கோடி மதிப்புள்ளதாகும். இதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 1263 கிலோ தங்கமும், உத்திரப் பிரதேசத்தில் 700 கிலோ தங்கமும் பிடிபட்டுள்ளன.

தமிழகத்தில் ரொக்கப் பணமாக ரூ.215.14 கோடி பிடிபட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களை விட மிகவும் அதிகமாகும். ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.137.27 கோடி ரொக்கமும் தெலுங்கானாவில் ரூ.68.82 கோடி ரொக்கமும் பிடிபட்டுள்ளன.

உத்திரப் பிரதேசத்தில் அதிக அளவில் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தம் பிடிபட்ட 62 மெட்ரிக் டன் எடையிலான போதை மருந்துகளில் 19.3 டன்கள் உத்திரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளன. சென்ற 2014 ஆம் வருடம் மொத்தம் 7.64 டன்கள் எடையிலான போதை மருந்துகள் பிடிபட்டன.

இதுவரை 132.6 லட்சம் லிட்டர் மதுவகைகள் பிடிபட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 32.24 லிட்டர் மது வகைகள் பிடிபட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.25.24 கோடி ஆகும். உத்திரப்பிரதேசத்தில் 15.54 லட்சம் லிட்டர் மது வகைகளும் மேற்கு வங்கத்தில் 14.06 லடச்ம லிட்டர் மது வகைகளும் பிடிபட்டுள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் மொத்தம் 62 லட்சம் லிட்டர் மதுவகைகள் பிடிபட்டுள்ளது.