சென்னை:
தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மங்கை கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதுபோல வெற்றிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை தட்டிவந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\
அதுபோல 4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்தியாவிற்கான 2 பேரின் சாதனைகளை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.