சென்னை:

லிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இன்று தமிழகம் திரும்பியுள்ள  தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துக்கு  சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், விளையாட்டு துறையினர் மட்டுமே வரவேற்பு அளித்தனர்.

அதையடுத்து விமான நிலைய வாளக்ததில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், முதல்வரின் வாழ்த்து தனக்கு ஊக்கத்தை அளிப்பதாக தெரிவித்தவர், தன்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் வேண்டூகோள் விடுத்தார்.

தனக்கு தமிழகஅரசு  உதவி செய்தால் ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என்றும் உறுதிபடி கூறினார்.

தனது வெற்றியாக காண தனது தந்தை இல்லையே என்று வருத்திய கோமதி மாரிமுத்து,  தனது  வெற்றிக்காக, மாட்டுக்கு வைத்திருந்த உணவை சாப்பிட்டு தந்தை தன்னை வளர்த்ததாக கண்ணீருடன் நினைவு கூர்ந்தார்.

கோமதி மாரிமுத்தை  பாராட்டிய தனியார் பள்ளி ஒன்று 3 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியது.  ஏற்கனவே நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்சம் பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அருகே உள்ள முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பேருந்து வசதியும் குறைவுதான். தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு மைதானத்தில் பயிற்சி செய்திருக்கிறார் கோமதி.

இளநிலை வணிகவியல் படித்துள்ள கோமதி, சிறுவயது முதலே தடகளத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலங்களிலேயே பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றவர். மாரிமுத்து – ராசாத்தி தம்பதியினருக்கு கோமதி கடைசி குழந்தை. மகள் மீது அதிக அன்புள்ள மாரிமுத்து, சைக்கிளிலேயே அவரை மைதானத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

2013-ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் கோமதி பங்கேற்று வந்தார். இதனிடையே அவரின் அன்புத் தந்தை மாரிமுத்து, புற்றுநோயால் மரணமடைந்தார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து பக்கபலமாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

எனினும் தனது தோழியின் முயற்சியால் சென்னை வந்து பயிற்சி பெற்றவர்,  தனது விடா முயற்சியால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் கோமதி.

கோமதி தற்போது  பெங்களூரு வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார்.