பெங்களூரு
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக பொய்த் தகவல் அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு இந்தியாவிலும் அத்தகைய தாக்குதல் ந்டைபெறலாம் என ஊகங்கள் உள்ளன. குறிப்பாக தென் மாநிலங்களில் கடல் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன. மும்பை தீவிரவாத தாக்குதலின் போது தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவியதால் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
கர்நாடக மாநில டிஜிபி நீலமணி ராஜுவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் தமிழகம், கர்நாடகா கேரளா ஆந்திரா தெலுங்கானா, புதுச்சேரி, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தீவிரவத தாக்குதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஒட்டி அவர் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பினார்.
நீலமணி ராஜுவை தொலைபேசியில் அழைத்தவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த தகவல் அளித்தவரை கண்டு பிடித்து விட்டதாக தெரிய வந்துள்ளது
பெங்களூரு நகர்ப்புற காவல்துறை சுப்பிரண்ட், “இந்த தகவல் பொய்யானது. இந்த பொய்யான தகவலை தொலைபேசி மூலம் அளித்தவர் பெயர் சுந்தர மூர்த்தி ஆகும். இவ்ர் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வருகிரார். சுமார் 65 வயதாகும் இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரை பொய்யான தகவ்ல் அளித்ததற்காக காவல்துறை கைது செய்துள்ளது” என அறிவித்துள்ளார்.