பெங்களூரு

மிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக கர்நாடக மாநில காவல்துறை தலைவர் நீலமணி ராஜு கடிதம் எழுதி உள்ளார்.

நீலமணி ராஜு

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். அத்துடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தேவாலயம் மற்றும் ஓட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்டது. இந்தியாவிலும் இது போல தாக்குதல் நடைபெறலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக காவல்துறை தலைவரும் முதல் பெண் டிஜிபி அதிகாரியுமான நீலமணி ராஜுவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் தனது பெயரை தெரிவிக்காத ஒருவர் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் உள்ள முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக எச்சரித்துள்ளார்.

இந்த தாக்குதல்கலி ரெயிலில் நடைபெறும் எனவும் அந்த மர்ம மனிதர் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களைநீலமணி ராஜு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 தீவிரவதிகள் ஊடுருவி உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதை ஒட்டி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடு பட்டுள்ளனர்.