கொழும்பு:
ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தற்கொலை பயங்கரவாதிகளின் படத்தை இலங்கைஅரசு வெயியிட்டு உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என 8 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் மேலும் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகத்தையே உலுக்கிய இந்திய குண்டுவெடிப்பை நடத்தியது நாங்கள்தான் என்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கொக்கரித்து வருகிறது.
இந்த நிலையில், கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளான சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலை பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் இலங்கையின் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்றும், அவர்களது பெயர் இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் கூறப்படுகிறது. இந்த படத்தை பிரிட்னின் ‘டெய்லி மெயில்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களின் தந்தையான பிரபல வர்த்தகர் இப்ராஹிம் தெமட்டகொடவில் வைத்துப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மேலும, அல் முக்தார், அபு கலீல், அபு ஹம்ஸா, அபு முஹம்மத், உள்பட 7 பேரின் பெயரை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.