அகமதாபாத்:
2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்தின் போது உயிர் பிழைத்தவர், பாஜக தலைவர் அமீத்ஷாவை எதிர்த்து காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

2002-ம் ஆண்டு குஜராத்தில் குல்பர்க் சமூகத்தினருக்கு எதிராக கலவரம் மூண்டது.
அப்போது அகமதாபாத்தில் வசித்த ஃபிரோஜ் கான் பதான் பதான் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோரும் அடங்குவர்.
இதில் ஃபிரோஜ் கானும் அவரது சகோதரரும் உயிர் தப்பினர்.
குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவை தொகுதியில், பாஜக தலைவர் அமீத்ஷாவை எதிர்த்து உயிர் தப்பிய ஃபிரோஜ் கான் பதான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
குல்பர்க் கலவர வழக்கில் ஃபிரோஜ் கான் பதான் சகோதரர் இம்தியாஜ் கான் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து, உங்களுக்கு எதிராக போராட வந்திருக்கிறேன் என்ற செய்தியை அமீத்ஷாவுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஏராளமான இந்து நண்பர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். இந்துக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
குஜராத்தில் எல்லா சமுதாயத்தினருக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் தலைவர்கள் இல்லை என்றார் ஃபிரோஜ் கான்.