சென்னை:
நாளை மறுதினம் (18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழகம் உள்பட 91 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகறிது.
தமிழகத்தில் நாடாளுமன்றம் , 18 சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இன்று கடைசிநாள் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரம் அனைத்தும் இன்று மாலையுடன் ஓய்கிறது. நாளை மறுதினம் (18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 91 தொகுதிகளில் ஏற்கனவே முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு 97 தொகுதிகளில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 மக்களவைத் தொகுதி உள்பட அசாம் – 5 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், சத்திஸ்கர் -3 தொகுதி, ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள், கர்நாடகா – 14 தொகுதிகள், மகாராஷ்டிரா10 தொகுதிகள், மணிப்பூர் -1 தொகுதி, ஒடிசா – 5 தொகுதிகள், , திரிபுரா – 1 தொகுதி, உ.பி. 8 தொகுதிகள், மேற்கு வங்கம் – 3 தொகுதிகள் என மொத்தம் 97 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து . கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தா மல் பல்வேறு கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.