சென்னை:

“சென்னை–சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. இது எடப்பாடி அரசுக்கு விழுந்த மரண அடி  என்றும்,  தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என  தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.